'பிச்சைக்காரன் 2' படத்தின் முதல் 4 நிமிட டிரைலர் வெளியனது


பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் 4 நிமிட டிரைலர் வெளியனது
x

இதுவரை யாரும் இவ்வாறு டிரைலர் வெளியிடாத நிலையில் விஜய் ஆண்டனி புதுமை செய்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

சென்னை,

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இதையடுத்து இப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி, இப்படத்தின் ஆரம்ப காட்சி டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 3.45 நிமிடம் உள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். மேலும், இதுவரை யாரும் இவ்வாறு டிரைலர் வெளியிடாத நிலையில் விஜய் ஆண்டனி புதுமை செய்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

.


Next Story