காதலர் தினத்தில் காதலிக்கு அளித்த முதல் பரிசு... மனம் திறந்த நடிகர் ஷாருக் கான்


காதலர் தினத்தில் காதலிக்கு அளித்த முதல் பரிசு... மனம் திறந்த நடிகர் ஷாருக் கான்
x

காதலர் தினத்தில் காதலிக்கு அளித்த முதல் பரிசு பற்றிய ரசிகையின் கேள்விக்கு நடிகர் ஷாருக் கான் மனம் திறந்து பதிலளித்து உள்ளார்.புனே,


இந்தி திரையுலகில் பிரபல நடிகரான ஷாருக் கான் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவரது மனைவி கவுரி கான். கட்டிட உட்புற வடிவமைப்பாளர். ஷாருக் கான் ரசிகர்களுடன் சமூக ஊடகம் வழியே உரையாடுவதில் விருப்பம் உள்ளவர்.

இந்த நிலையில், ஷாருக் கானிடம் கேளுங்கள், என்ற தலைப்பிலான டுவிட்டர் வழியே ரசிகர்களுடன் உரையாடும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக் கான் கலந்து கொண்டார்.

அந்த வாய்ப்பை தவற விடாமல் ரசிக ரசிகைகள் பலரும் தங்களது கேள்வி கணைகளை தொடுத்தனர். இதனை பயன்படுத்தி கொண்ட பயனாளர் ஒருவர், காதலர் தினத்தில் கவுரி மேடத்திற்கு நீங்கள் வழங்கிய முதல் பரிசு என்ன? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஷாருக் கான் அளித்த பதிலில், சரியாக யோசித்து பார்த்தால் அது நடந்து தற்போது 34 ஆண்டுகள் ஆகிறது... பிங்க் வண்ணத்தினாலான ஒரு ஜோடி பிளாஸ்டிக் காதணி என நினைக்கிறேன் என பதிலளித்து உள்ளார்.

ஷாருக் கான் மற்றும் கவுரி இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 1991-ம் ஆண்டில் இவர்களது திருமணம் நடந்தது. 30 ஆண்டுகளாக பாலிவுட்டில் காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர்.

சமீபத்தில் கடந்த ஜனவரி 25-ந்தேதி அவரது பதான் படம் வெளியானது. பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து, படம் வெளியாவதில் பல சிக்கல்கள் எழுந்த நிலையில், அவற்றை முறியடித்து வசூலில் 20-க்கும் மேற்பட்ட சாதனைகளை படைத்து இருந்தது.Next Story