ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!


ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
x

ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் அருண் விஜய் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

குழந்தையுடன் அருண் விஜய் இருக்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

சமீபத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரில்லர் திரைப்படமாக உருவாகவுள்ள இந்த படம் தந்தை-மகள் உறவைப் பற்றியது என்று கூறப்படுகிறது.



Next Story