சார்லி நடிக்கும் 'ஃபைண்டர்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!


சார்லி நடிக்கும் ஃபைண்டர் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
x

சார்லி நடிக்கும் 'ஃபைண்டர்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

சென்னை,

இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஃபைண்டர்'. மேலும் இந்த படத்தில் நிழல்கள் ரவி, செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி மற்றும் பிரானா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அரபி புரொடக்சன் மற்றும் வியான் வென்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சூர்ய பிரசாத் இசையமைக்கிறார்.

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத்தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


1 More update

Next Story