நயன்தாரா நடித்துள்ள 'அன்னபூரணி' படத்தின் முதல் பாடல் வெளியானது..!


நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி படத்தின் முதல் பாடல் வெளியானது..!
x

'அன்னபூரணி' திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது, இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு 'அன்னபூரணி' என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள 'அன்னபூரணி' படக்குழு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி அன்னபூரணி' படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அன்னபூரணி படத்தின் முதல் பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 'அன்னபூரணி' திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.




Next Story