நேரு உள்விளையாட்டு அரங்கில் 'லியோ ' படத்தின் வெற்றி விழா..! விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி


நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ  படத்தின் வெற்றி விழா..! விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 28 Oct 2023 2:14 PM GMT (Updated: 28 Oct 2023 2:51 PM GMT)

விஜய் கலந்து கொள்ளும் 'லியோ ' படத்தின் வெற்றி விழாவுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு படத் தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார்

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் கடந்த வாரம் வெளியானது.

லியோ திரைப்படம் முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.461 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்தது. மேலும், தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது

இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விஜய் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு படத் தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார்


Next Story