இணையத்தில் வைரலாகும் 'தசரா' படத்தின் மேக்கிங் வீடியோ..!


இணையத்தில் வைரலாகும் தசரா படத்தின் மேக்கிங் வீடியோ..!
x

நானி நடிப்பில் வெளியான 'தசரா' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடித்துள்ள 'தசரா' திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், 'தசரா' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story