'புளூ ஸ்டார்' படத்தின் புதிய பாடல் வெளியானது..!


புளூ ஸ்டார் படத்தின் புதிய பாடல் வெளியானது..!
x

நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'புளூ ஸ்டார்'.

சென்னை,

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் 'ரெயிலின் ஒலிகள்' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'புளூ ஸ்டார் ஆந்தம்' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை அறிவு எழுதி, பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story