வெளியானது 'வேட்டையன்' படத்தின் அடுத்த பாடல்


The next song of the film Vettaiyan was released
x

'வேட்டையன்' படத்தின் முதல் பாடலான 'மனசிலாயோ' பாடல் வெளியாகி வைரலானது.

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

'வேட்டையன்' படம் அடுத்த மாதம் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் முதல் பாடலான 'மனசிலாயோ' பாடல் வெளியாகி வைரலானது.

'மனசிலாயோ' பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றநிலையில், படத்தில் 2-வது பாடல் வெளியாகி உள்ளது. அதன்படி, இரண்டாவது பாடலான 'ஹண்டர் வண்டார்' வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story