விமல் நடித்துள்ள 'சார்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!


விமல் நடித்துள்ள சார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
x

நடிகர் விமல் நடித்துள்ள 'சார்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020-ம் ஆண்டு 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். தற்போது இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ளார். இப்படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று படக்குழுவினர் பெயரிட்டு இருந்தனர்.

இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிடுகிறது. முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் ஒரு சில காரணத்தினால் தற்பொழுது "சார்" என மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் சாயா தேவி கண்ணன், சிராஜ், சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சித்து குமார் இசையில் உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் படிப்பறிவே இல்லாத ஒரு கிராமத்தில் பள்ளிக்கூடம் நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த பள்ளிக்கூடத்திற்கு செல்லும் ஆசிரியராக விமல் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில், அதை தொடர்ந்து 4 பாடல்கள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், நடிகர் விமல் நடித்துள்ள 'சார்' படம் வருகின்ற 18ம் தேதி வெளியாவதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

1 More update

Next Story