காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் 'நிலா வரும் வேளை' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்


காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் நிலா வரும் வேளை படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
x

இந்த படத்தை 'என்ன சொல்ல போகிறாய்' படத்தை இயக்கிய ஹரி இயக்குகிறார்.

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திரில்லர் படத்துக்கு 'நிலா வரும் வேளை' என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் தமிழில் காளிதாஸ் ஜெயராமும் தெலுங்கில் சத்யதேவ் காஞ்சரனாவும் கதாநாயகனாக நடிக்கின்றனர்.

மிராக்கிள் மூவிஸ் நிறுவனம் சார்பில் ஸ்ருதி நல்லப்பா தயாரிக்கும் இந்த படத்தை 'என்ன சொல்ல போகிறாய்' படத்தை இயக்கிய ஹரி இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பாலக்காட்டில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.


Next Story