கதைதான் கதாநாயகனாக இருக்க வேண்டும் - நடிகை அனுபமா


கதைதான் கதாநாயகனாக இருக்க வேண்டும் - நடிகை அனுபமா
x

தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தள்ளிப்போகாதே படத்தில் அதர்வா ஜோடியாக வந்தார். தெலுங்கு, மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில்,

''சினிமாவில் நடிக்க எனக்கென்று சில கட்டுப்பாடுகள் வைத்துள்ளேன். கதாநாயகனை புகழ்ந்து கொண்டாடியபடி சுற்றி வரும் கதாநாயகி கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன். நான் நடிக்கும் படங்களில் கதைதான் கதாநாயகனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். மலையாள சினிமா துறையில் சில எல்லைகளுக்கு உட்பட்டுத்தான் படங்களை எடுக்கிறார்கள். பிரமாண்டத்திற்கு போகாமல் மிகக்குறைந்த பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கிறார்கள். மலையாளத்தில் அற்புதமான கதைகள் படங்களாக வந்துள்ளன. தெலுங்கில் பிரமாண்டமாக படங்களை எடுக்கிறார்கள். இப்போது ஓ.டி.டி. வந்த பிறகு சினிமாக்களை ரீமேக் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ரசிகர்கள் அனைத்து மொழியின் டப்பிங் படங்களை பார்க்கிறார்கள். எனக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு என்ற வித்தியாசம் எதுவும் இல்லை. நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்றார்.

1 More update

Next Story