கபில் தேவ் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியிட்ட 'லால் சலாம்' படக்குழு


கபில் தேவ் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியிட்ட லால் சலாம் படக்குழு
x
தினத்தந்தி 6 Jan 2024 8:40 AM GMT (Updated: 6 Jan 2024 8:41 AM GMT)

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

சென்னை,

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், இன்று கபில்தேவ் பிறந்தநாளை முன்னிட்டு, புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.


Next Story