'பூங்குழலி' கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்ட 'பொன்னியின் செல்வன்' படக்குழு


பூங்குழலி கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு
x

'பூங்குழலி' கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை 'பொன்னியின் செல்வன்' படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த 'பூங்குழலி' கதாப்பாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story