மம்முட்டி, ஜீவா நடித்துள்ள 'யாத்ரா-2' படத்தின் டீசர் வெளியானது...!


மம்முட்டி, ஜீவா நடித்துள்ள யாத்ரா-2 படத்தின் டீசர் வெளியானது...!
x

மஹி வி ராகவ் இயக்கியுள்ள இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மறைந்த ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கை கதை, 'யாத்ரா' என்ற பெயரில் 2019-ல் திரைப்படமாக வெளிவந்தது. இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை கதை 'யாத்ரா-2' என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. ஜெகன் மோகன் ரெட்டியின் இளம்வயது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஆந்திர முதல்-மந்திரியானது வரை நடந்த சம்பவங்கள் இந்த படத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

மஹி வி ராகவ் இயக்கியுள்ள இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'யாத்ரா-2' திரைப்படத்தின் டீசரை மம்முட்டி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story