சிம்பு நடித்துள்ள 'பத்து தல' படத்தின் டீசர் வெளியானது..!


சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் டீசர் வெளியானது..!
x
தினத்தந்தி 3 March 2023 6:22 PM IST (Updated: 3 March 2023 6:28 PM IST)
t-max-icont-min-icon

சிம்பு நடித்துள்ள 'பத்து தல' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, சிம்பு நடித்துள்ள 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இதில் சிம்புவுடன் கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கன்னடத்தில் 2017-ம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் 'பத்து தல' படத்தின் 'நம்ம சத்தம்' என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'பத்து தல' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியாகி உள்ள டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பத்து தல' திரைப்படம் மார்ச் 30-ந்தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story