'கண்ணகி' படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது..!


கண்ணகி படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது..!
x

'கண்ணகி' திரைப்படம் வருகிற 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள திரைப்படம் 'கண்ணகி'. மேலும் இந்த படத்தில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட், இ5 என்டர்டெயின்மென்ட் (E5 ENTERTAINMENT) இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'மதர்ஸ் லுல்லபி' (Mother's Lullaby) என்ற பாடல் வெளியாகி உள்ளது.

கார்த்திக் நேத்தா எழுதியுள்ள இந்த பாடலை பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'கண்ணகி' திரைப்படம் வருகிற 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story