நயன்தாரா நடித்துள்ள 'அன்னபூரணி' படத்தின் ட்ரெய்லர் வெளியானது


நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி படத்தின் ட்ரெய்லர் வெளியானது
x
தினத்தந்தி 27 Nov 2023 6:27 PM GMT (Updated: 28 Nov 2023 12:03 AM GMT)

நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம், 4 தென்னிந்திய மொழிகளில் தயாராகியுள்ளது.

சென்னை,

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது, இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு 'அன்னபூரணி' என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 தென்னிந்திய மொழிகளில் தயாராகியுள்ளது.

சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிக்குமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ்,நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. தற்போது இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. படம் வருகிற டிசம்பர் 1-ந்தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story