இணையத்தில் வைரலாகும் `ரகு தாத்தா' பட டிரைலர்


The trailer of ``raghu thatha is going viral on the internet
x

'ரகு தாத்தா' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

சென்னை,

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' திரைப்படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

படத்தின் முதல் பாடலான 'அருகே வா' பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதேபோல், இப்படத்தின் 2-ம் பாடலான `ஏக் காவ் மே' என்ற பாடல் நேற்று வெளியானது. இப்பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார்.

இந்நிலையில், ரகு தாத்தா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்த மாதம் 15 -ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story