'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது...!


வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது...!
x

இந்த திரைப்படம் பிப்ரவரி 2-ம் தேதியன்று வெளியாகிறது.

சென்னை,

நடிகர் சந்தானம் சமீபத்தில் வெளியான 'கிக்' படத்திற்கு பின்னர் 'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைக்கோர்த்துள்ளார்

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பிப்ரவரி 2-ம் தேதியன்று வெளியாகிறது.

இந்த நிலையில் 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Next Story