வெற்றி மாறன் இயக்கியுள்ள 'விடுதலை - பாகம் 1' படத்தின் டிரைலர் வெளியானது..!


வெற்றி மாறன் இயக்கியுள்ள விடுதலை - பாகம் 1 படத்தின் டிரைலர் வெளியானது..!
x

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படம் 'விடுதலை'. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. முதல் பாகம் வருகிற மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான 'ஒன்னோட நடந்தா' என்ற பாடல் சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் குரலில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், 'விடுதலை' படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'விடுதலை' திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.Next Story