விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகிறது...!


விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகிறது...!
x

நடிகர் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ரிது வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த 'துருவ நட்சத்திரம்' படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.




Next Story