ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறது.!


ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறது.!
x

ஜெயிலர் படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்த படம், சில நாட்களுக்கு கடந்த மாதம் படப்பிடிப்பு முடிவடைந்த விட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், இந்த படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.


Next Story