என்னை காயப்படுத்துகின்றனர்... ஆடை சர்ச்சைக்கு பாவனா பதிலடி


என்னை காயப்படுத்துகின்றனர்... ஆடை சர்ச்சைக்கு பாவனா பதிலடி
x

என்னை காயப்படுத்துகின்றனர் என ஆடை சர்ச்சைக்கு நடிகை பாவனா வலைத்தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பாவனா கடைசியாக 2017-ல் ஆதம் ஜான் என்ற மலையாள படத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு நடிக்காமல் இருந்த அவர் 5 வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாவனாவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அவர் அணிந்து வந்த கவர்ச்சி ஆடையை வலைத்தளங்களில் பலரும் கேலி செய்து மோசமாக விமர்சித்தனர். இதற்கு பதிலடி கொடுத்து பாவனா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''எனது அன்புக்குரியவர்கள் காயமடையாமல் இருக்கவும், ஒரு நாள் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பவும் நான் முயற்சித்து வரும் நிலையில், எதிர்மறையான கருத்துகளாலும், துஷ்பிரயோகங்களாலும் என்னை மீண்டும் இருளுக்கு இழுக்க முயற்சிக்கின்றனர். இது வேதனை அளிக்கிறது.

நான் என்ன செய்தாலும் மோசமான வார்த்தையை பயன்படுத்தி காயப்படுத்துகின்றனர். இதுபோன்ற செயல்கள் மூலம் மகிழ்ச்சி அடைய விரும்பினால் அவர்களை தடுக்க நான் விரும்பவில்லை. என் சருமத்தின் நிறத்தில்தான் ஆடை அணிந்தேன். விமர்சிப்பவர்கள் சொல்வது போன்ற ஆடையை அணியவில்லை" என்றார்.

1 More update

Next Story