'சினிமாவில் என்னை உருவ கேலி செய்தனர்' -நடிகை ரோஜா


சினிமாவில் என்னை உருவ கேலி செய்தனர் -நடிகை ரோஜா
x

நடிகை ரோஜா சினிமாவில் தான் எதிர்கொண்ட உருவ கேலி அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரோஜா தற்போது ஆந்திர மந்திரியாக இருக்கிறார். இந்த நிலையில் சினிமாவில் எதிர்கொண்ட உருவ கேலி அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ரோஜா கூறும்போது, "சினிமா துறையில் அடி எடுத்து வைத்த நாட்களில் நானும் உருவ கேலிக்கு ஆளானேன். எனது நிறம் எனது உயரத்தைப் பற்றி சிலர் கேலியாக பேசினார்கள்.

என்னால் எந்த காரியத்தையாவது செய்ய முடியாது என்று யாராவது சொன்னால் அதை செய்யும் வரை நான் ஓயமாட்டேன். இதுதான் எனது குணம்.

நான் நடிகையாக வேண்டும் என முடிவு செய்த பிறகு அதில் முழு மனதோடு இறங்கினேன். நடனம் தெரியாது என்று என்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடியாக உடனே நடனம் கற்றுக்கொண்டேன்.

என்னை எவ்வளவு அடக்க முயன்றார்களோ அந்த அளவுக்கு வளர்ந்து காட்டினேன். என்னை உருவ கேலி செய்தவர்களே எனது கால் ஷீட்டுக்காக காத்திருக்கும்படி முன்னேறி காட்டினேன்.

சினிமாவிற்கு வந்த புதிதில் கொஞ்சம் சத்தமாக பேசினாலும் அழுது விடுவேன். அவ்வளவு மென்மையாக இருந்தேன். அதன் பிறகு சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி என் மனதை நோகச் செய்து என்னை ஸ்ட்ராங்காக மாற்றிவிட்டார்கள்'' என்றார்.

1 More update

Next Story