'மிகச்சிறந்த பயணம் இது..' - ரஜினிகாந்துடன் விமானத்தில் பயணித்த நிக்கி கல்ராணி நெகிழ்ச்சி


மிகச்சிறந்த பயணம் இது.. - ரஜினிகாந்துடன் விமானத்தில் பயணித்த நிக்கி கல்ராணி நெகிழ்ச்சி
x

ரஜினிகாந்துடன் ஐதராபாத் முதல் சென்னை வரை விமானத்தில் ஒன்றாக பயணித்த அனுபவத்தை நிக்கி கல்ராணி பகிர்ந்துள்ளார்.

சென்னை,

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'டார்லிங்' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகவரயினும் நாகாக்க, கலகலப்பு-2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நிக்கி கல்ராணி, தற்போது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக மலையாளத்தில் நடிகர் அர்ஜுன் நடித்துள்ள 'விருன்னு' என்ற கிரைம் திரில்லர் படத்தில் நிக்கி கல்ராணி நடித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பக்கா' திரைப்படத்தில் ரஜினி ராதா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகையாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் ஐதராபாத் முதல் சென்னை வரை விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த அனுபவத்தை நிக்கி கல்ராணி தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், விமானத்தில் ரஜினிகாந்துடன் எடுத்துகொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், "இது என்னுடைய மிகச்சிறந்த விமானப் பயணம். இந்த பயணத்தின்போது எனக்குள் இருக்கும் குட்டி ரசிகையால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.



1 More update

Next Story