இவன்தான் பிக்கிலி - ரசிகர்களை பயமுறுத்திய விஜய் ஆண்டனி


இவன்தான் பிக்கிலி - ரசிகர்களை பயமுறுத்திய விஜய் ஆண்டனி
x

'பிச்சைக்காரன்-2' படத்தின் பிக்கிலி என்ற கதாபாத்திரத்தின் போஸ்டரை நடிகர் விஜய் ஆண்டனி பகிர்ந்துள்ளார்.

சென்னை,

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகி வைரலானது. 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் 'பிச்சைக்காரன் -2' படத்தில் இடம்பெற்றுள்ள பிக்கிலி என்ற கதாப்பாத்திரத்தை ரசிகர்களுக்கு போஸ்டர் வெளியிட்டு விஜய் ஆண்டனி அறிமுகப்படுத்தியுள்ளார். அதில், "நண்பா.. இவன்தான் பிக்கிலி. கொஞ்சம் கவலப்படுங்க, முடிஞ்சா பயப்புடுங்க. இவனப்பத்தி, நாளைக்கி மாலை 4 மணிக்கி, பிக்கிலி பாடல்ல இன்னும் நிறைய சொல்றேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பிக்கிலி போஸ்டர் தங்களை பயமுறுத்துவதாக ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

1 More update

Next Story