உன்னோடு வாழும் இந்த காலம் போதும்... இணையத்தில் வைரலாகும் 'ருத்ரன்' பட பாடல்


உன்னோடு வாழும் இந்த காலம் போதும்... இணையத்தில் வைரலாகும் ருத்ரன் பட பாடல்
x

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ருத்ரன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் திரைப்படம் 'ருத்ரன்'. இந்த படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்த நிலையில், 'ருத்ரன்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் மூன்றாவது பாடலான 'உன்னோடு வாழும்' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் கபிலன் எழுதியுள்ள இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ருத்ரன்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story