ஆடை இல்லா வித்யாபாலன்...! வைரலாகும் புகைப்படம்...!


ஆடை இல்லா வித்யாபாலன்...! வைரலாகும் புகைப்படம்...!
x
தினத்தந்தி 7 March 2023 8:10 AM GMT (Updated: 2023-03-07T13:46:30+05:30)

சில்க் சிமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் வித்யா பாலன் பிரபலமடைந்தார்.

மும்பை

2005-ஆம் ஆண்டு வெளியான 'பிரினீதா' படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யா பாலன். 'பா', 'கஹானி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் மறைந்த நடிகை சில்க் சிமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.இப்படத்துக்குப் பிறகு நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

டபூ ரத்னானியின் வருடாந்திர பிரபல போட்டோஷூட்டுக்காக வித்யாபாலன் கொடுத்து உள்ள போஸ் இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஒரு கையில் செய்தித்தாள் மற்றும் மறு கையில் காபி கோப்பையுடன் போஸ் கொடுத்து உள்ளார். ஆனால் ஆடை இல்லை. ஹீல்ஸ் மற்றும் சன்கிளாஸ் அணிந்து, செய்தித்தாளின் பின்னால் ஆடையின்றி இருப்பது போல் தெரிகிறது.

ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் முதல் ஹிருத்திக் ரோஷன் மற்றும் கரீனா கபூர் வரை டபூ ரத்னானி போட்டோஷூட் செய்து உள்ளார்.

டபூ ரத்னானியின் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வித்யா பாலனின் படத்தை இங்கே காண்க:
Next Story