உலகளவில் அதிகம் தேடப்பட்ட 3 இந்திய திரைப்படங்கள்... பட்டியலை வெளியிட்ட கூகுள்...!


உலகளவில் அதிகம் தேடப்பட்ட 3 இந்திய திரைப்படங்கள்... பட்டியலை வெளியிட்ட கூகுள்...!
x

2023ம் ஆண்டுக்கான அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

சென்னை,

இணையத்தில் தகவல்களை தேடுவோருக்கு சர்ச் என்ஜின் எனப்படும் தேடுபொறி மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வசதியை பல மென்பொருள் நிறுவனங்கள் வழங்கினாலும், ஆல்பாபெட் நிறுவனத்தின் கூகுள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் உலகளவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பெயர்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2023ம் ஆண்டில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஜவான், கடார் 2, பதான் ஆகிய 3 இந்திய படங்கள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளன. உலகளவில் அதிகம் தேடப்பட்ட படமாக ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்போடு வெளியான 'பார்பி' திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் பார்பி, ஓப்பன் ஹெய்ம்ர், ஜவான், சவுண்ட் ஆப் பிரீடம், ஜான் விக் - சாப்டர் 4, அவதார் - தி வே ஆப் வாட்டர், எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ், கடார் 2, கிரீட் 3, பதான் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களால் அதிகமாக தேடப்பட்டு முறையே முதல் 10 இடங்களை பெற்றுள்ளன.


Next Story