'ஜப்பான்' படத்தின் 'டச்சிங் டச்சிங்' வீடியோ பாடல் வெளியானது...!


ஜப்பான் படத்தின் டச்சிங் டச்சிங் வீடியோ பாடல் வெளியானது...!
x
தினத்தந்தி 8 Nov 2023 11:47 AM IST (Updated: 8 Nov 2023 5:04 PM IST)
t-max-icont-min-icon

ஜப்பான் படத்தின் 'டச்சிங் டச்சிங்' வீடியோ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை,

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'டச்சிங் டச்சிங்' வீடியோ பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது ஜப்பான் படத்தின் 'டச்சிங் டச்சிங்' வீடியோ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story