விஜய் சேதுபதியின் 'டிஎஸ்பி' பட டிரைலர் வெளியானது


விஜய் சேதுபதியின் டிஎஸ்பி பட டிரைலர் வெளியானது
x
தினத்தந்தி 25 Nov 2022 4:17 PM GMT (Updated: 25 Nov 2022 4:18 PM GMT)

விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள 'டிஎஸ்பி' படத்தின் டிரைலர் வெளியானது.

சென்னை,

விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார்.

மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






Next Story