விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறிய திரிஷா - வைரல்
நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
சென்னை,
நடிகர் விஜய் நேற்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அதன்படி, விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ள திரிஷா, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தி கோட்'. இப்படத்தின் முதல் பாடலான 'விசில் போடு' சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், படத்தின் 2-வது பாடலான 'சின்ன சின்ன கண்கள்' நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்பாடல் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி குரலில் உருவாகி இருந்தது.
Related Tags :
Next Story