'தக் லைப்' படத்தின் புதிய அப்டேட்: திரிஷாவின் புகைப்படம் வைரல்


Trisha treats fans by revealing a surprise update from Thug Life
x

'தக் லைப்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சென்னை,

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் 'தக் லைப்'. திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், 2ம் கட்ட படப்பிடிப்பு செர்பியாவிலும் நடைபெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் நடிகை திரிஷா கலந்துக்கொண்டார். மேலும் இப்படத்தில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில், 'தக் லைப்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தக் லைப்' படத்திற்காக திரிஷா நடன ஒத்திகை செய்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Next Story