சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் டிடிஎப் வாசன்.! பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் டிடிஎப் வாசன்.! பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
x

டிடிஎப் வாசன் பிறந்தநாளான இன்று, படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை,

பைக் ரைடரான டிடிஎப் வாசன், யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, தன் உயர் ரக டூ வீலரை ஓட்டிக் கொண்டே, கேமராவில் பேசுவது, மலை பிரதேசங்களுக்கு டூ வீலரில் சென்று வந்து அந்த பதிவுகளை யூடியூப்பில் அப்லோட் செய்வது என அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

அந்த யூடியூப் சேனலை பார்க்க ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவானது. இந்த நிலையில்தான் அவர் சினிமாவில் ஹூரோவாக அறிமுகமாகவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

6 கோடி பட்ஜெட்டில் தயாராகும் அந்த படத்தில், பல முன்னணி நடிகர்களும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், டிடிஎப்வாசன் பிறந்தநாளான இன்று, படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

டிடிஎப் வாசன் நடிக்கப்போகும் படத்தின் கதை என்ன?, ஹீரோயின் யார் ?போன்ற தகவல்களையெல்லாம் தெரிந்து கொள்ள அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Next Story