கவனிக்கப்படாத டைரக்டர் மகிழ் திருமேனி...! லியோ விஜய்க்கு போட்டி கொடுக்கப்போகும் அஜித்


கவனிக்கப்படாத டைரக்டர் மகிழ் திருமேனி...! லியோ விஜய்க்கு போட்டி கொடுக்கப்போகும் அஜித்
x

மகிழ் திருமேனி லண்டன் சென்று லைகா தயாரிப்பு நிறுவனத்திடம் கதையை ஒப்புதல் பெற்றதாகவும், அஜித்தும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார் என கூறப்பட்டது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஏகே62 படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகி விட்டதாகவவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக 'தடம்', 'மீகாமன்', 'கலகத்தலைவன்' போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகிழ் திருமேனி லண்டன் சென்று லைகா தயாரிப்பு நிறுவனத்திடம் கதையை ஒப்புதல் பெற்றதாகவும், அஜித்தும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தனது 67ஆவது படத்தின் பெயரை லியோ என அறிவித்துள்ள நிலையில், அஜித்தின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது. ஏனென்றால், வாரிசு - துணிவு படங்களை தொடர்ந்து, தளபதி67 - ஏகே62 படங்களும் ஒன்றாக வெளியாகும் என கூறப்படுகிறது.

லியோ படத்தின் வெளியீடு ஆயுத பூஜையையொட்டி, இந்தாண்டு அக். 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, அதே தேதியில் ஏகே62 படத்தையும் வெளியிட அஜித் தரப்பு முடிவெடுத்துள்ளதாகவும், விரைவாக படத்தை திட்டமிட்டு முடிக்கும் வகையில் மகிழ் திருமேனி படப்பிடிப்புக்கு திட்டமிடுவார் என கூறப்படுகிறது.

மகிழ் திருமேனி தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சமூக சார்ந்தும், நிழல் உலகம் குறித்தும் ஆழ்ந்த பார்வையுள்ள மகிழ், லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம் பாணி படமாக பார்க்கப்படும் லியோவிற்கு சரியான போட்டியாக இருக்கும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் கவனிக்கபடாத டைரக்டர் மகிழ் திருமேனி தடம், கலக தலைவன் போன்ற திரைப்படங்களால் பெரும்பாலும் இவரைத் தெரிந்தாலும் அதற்கு முன்னே தடையற தாக்க, மீகாமன் ' போன்ற படங்களைப் பார்த்தால் அவர் எவ்வளவு குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கிறார் என்பது புரியும்.

லோகேஷ் கனகராஜுக்கு நிகரான வரவேற்பைப் பெற வேண்டியவர் இவர் என்பது மீகாமனைப் பார்த்தால் புரியும்.9 வருடங்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தில் பேய் கான்செப்ட், ஸ்பை கான்செப்ட், போதைப்பொருள் காட்டப்பட்டுள்ளது. இப்போது அந்த படம் வெளிவந்திருந்தால் லோகேஷ்க்கு கிடைத்த வரவேற்பு கிடைத்திருக்கும்... யாரும் கவனிக்காததற்கு காரணம் பிரபல ஹீரோக்களை வைத்து இயக்கவில்லை.

சமூக சார்ந்தும், நிழல் உலகம் குறித்தும் ஆழ்ந்த பார்வையுள்ள மகிழ் திருமேனி லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம் பாணி படமாக பார்க்கப்படும் லியோவிற்கு சரியான போட்டியாக இருப்பார் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story