தோனியின் திரைப்பட நிறுவனத்தின் முதல் படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிப்பு


தோனியின் திரைப்பட நிறுவனத்தின் முதல் படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிப்பு
x

தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் தோனி, பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வருகிறார். சென்னையின் எஃப்.சி. கால்பந்து அணியின் உரிமை, ஓட்டல், உடற்பயிற்சிக் கூடம், இயற்கை விவசாயம் என பல்வேறு தொழில்களில் தோனி முனைப்பு காட்டி வருகிறார்.

அந்த வகையில் 'தோனி எண்டர்டென்மெண்ட்' என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தோனி தொடங்கியுள்ளார். ஏற்கெனவே, 'தி ரோர் ஆஃப் தி லயன்' என்ற ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனம், அடுத்ததாக ஒரு நேரடி தமிழ் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், நாளை நண்கல் 12 மணிக்கு, திரைப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


#DhoniEntertainmentProd1 goes on floors tomorrow!

Title launch and Cast announcement - Tomorrow at 12 pm pic.twitter.com/6doNUkCs6p

— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) January 26, 2023 ">Also Read:


Next Story