"வேட்டையன்' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகிறது: அமீரகத்தில் ரசிகர்கள் உற்சாகம்


வேட்டையன் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகிறது: அமீரகத்தில் ரசிகர்கள் உற்சாகம்
x

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளியாகியுள்ளது.

துபாய்,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வரும் வியாழக்கிழமை இந்தியா, அமீரகம் உள்பட உலகம் முழுவதும் வௌியாகிறது. ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் தெ.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் துபாயில் பல்வேறு பகுதிகளில் வேட்டையன் திரைப்படத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. லைகா நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

குறிப்பாக வணிக வளாகங்களில் நடந்த நிகழ்ச்சியில் பிளாஷ்மாப் நடன காட்சியுடன் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதேபோல துபாயில் படகுகளில் சென்ற ரசிகர்கள் வேட்டையன் பட பேனரை (பிளக்சை) பிடித்தபடி உற்சாகமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் நாளை மறுநாள் வெளியாகும் வேட்டையன் திரைப்படத்தை காண முன்பதிவு செய்து காத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.


Next Story