குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா


குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா
x

அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை,

தமிழ் பட உலகில் நயன்தாரா முன்னணி நடிகையாக திகழ்கிறார். 'லேடி சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் அழைக்கப்பட்டும் வருகிறார். சமீபத்தில் 'அன்னபூரணி' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் 75- வது படமாகும். இவர் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.1,100 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்தது.

இயக்குனரான விக்னேஷ் சிவன் நயன்தாராவை ஜூன் 2022-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அழகான இரு ஆண் குழந்தைகள் அக்டோபர் 2022-ம் ஆண்டு பிறந்தன. அவர்களுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டனர். அவ்வப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் அவர்களின் திரை துறை வாழ்க்கையை பற்றியும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைப்பெறும் நிகழ்வை பற்றியும் புகைப்படங்களை பகிர்ந்து வருவர்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாரா அவரது மகன்களான உயிர் மற்றும் உலகுடன் குழந்தையோடு குழந்தையாய் விளையாடிக்கொண்டு இருக்கிறார். குழந்தையை தோள் மேல் தூக்கி வைத்து விளையாடுவது, மகனை முத்தமிடுவது, கொஞ்சுவது, சிரிப்பது, கைப் பிடித்து நடப்பது என அந்த வீடியோவில் காட்சிகள் அமைந்துள்ளன.

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீதான் என்னுடைய உயிர் மற்றும் உலகம் என அந்த வீடியோவில் நயன்தாராவை குறித்து பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story