இணையதளத்தில் தொடர்ந்து கசியும் விஜய் பட காட்சிகள்


இணையதளத்தில் தொடர்ந்து கசியும் விஜய் பட காட்சிகள்
x

தற்போது ஆஸ்பத்திரியில் நடந்த வாரிசு படப்பிடிப்பை செல்போனில் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையதளத்தில் தொடர்ந்து வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பை நடத்தியபோது, சிலர் அதை திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் பகிர்ந்தனர். அந்த புகைப்படங்களை பலர் வைரலாக்கினர். பின்னர் பைக்கில் வரும் வில்லனை விஜய் கீழே தள்ளி விட்டு சண்டைபோடும் காட்சி வெளியானது. சில தினங்களுக்கு முன்பு வாரிசு படப்பிடிப்பில் விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற புகைப்படம் மீண்டும் கசிந்தது. இந்த நிலையில் தற்போது ஆஸ்பத்திரியில் நடந்த வாரிசு படப்பிடிப்பை செல்போனில் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. படம் திரைக்கு வரும் முன்பே படக்காட்சிகள் ஒவ்வொன்றாக இணயதளத்தில் வெளியாகி வருவது படத்துக்கான எதிர்பார்ப்பை குறைத்து விடும் என்றும் எனவே படப்பிடிப்பில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் படக்குழுவினரை விஜய் ரசிகர்கள் வற்புறுத்தி உள்ளனர்.


Next Story