விஜய் சேதுபதி நடித்துள்ள முதல் வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


விஜய் சேதுபதி நடித்துள்ள முதல் வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள முதல் வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் அட்லீ இயக்கும் பாலிவுட் படமான 'ஜவான்' படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள முதல் வெப் தொடரான 'பார்ஸி'-யின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'பார்ஸி' வெப் தொடர் வருகிற பிப்ரவரி 10-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்த வெப் தொடரை 'தி ஃபேமிலி மேன்' புகழ் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளனர். அதிரடி திரில்லராக தயாராகியுள்ள இந்த தொடரில் ஷாஹித் கபூர், கே கே மேனன், ராஷி கண்ணா, ரெஜினா கசாண்ட்ரா, அமோல் பலேகர், புவனன் அரோரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



Next Story