சர்வதேச திரைப்பட விழாக்களில் 40 விருதுகளைப் பெற்ற விஜய் சேதுபதியின் 'மாமனிதன்'


சர்வதேச திரைப்பட விழாக்களில் 40 விருதுகளைப் பெற்ற விஜய் சேதுபதியின் மாமனிதன்
x

இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது. இப்படம் பார்த்த திரைபிரபலங்கள் பலரும் அவர்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் மாமனிதன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் 40 விருதுகளைப் பெற்றுள்ளது மற்றும் ஐஎம்டிபி நடத்தும் 3 விழாக்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



Next Story