புது முயற்சியில் விஜயகாந்த் மகன்


புது முயற்சியில் விஜயகாந்த் மகன்
x

நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இந்தியாவில் சர்வதேச கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். மும்பையில் நடக்க உள்ள முதல் இசை நிகழ்ச்சியில் பிரபல ஹிப்ஹாப் கலைஞர் 50-சென்ட் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அரங்கில் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. நேரடி பொழுதுபோக்கு துறையில் புகழ்பெற்று விளங்கும் விஜய பிரபாகரனின் வி.ஜெ.பி மற்றும் டிராக்டிகல் கான்சார்ட்ஸ் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்கள் பங்கேற்று பாட உள்ளனர்.

விஜயபிரபாகரன் கூறும்போது, ''திரையுலகில் எனது தந்தைக்கு தனி அடையாளம் உள்ளது. அதை முன் எடுத்து செல்லும் வகையில் எனது இந்த முயற்சி புதிதாகவும், மாறுபட்ட தொடக்கமாகவும் இருக்கும்'' என்றார்.

1 More update

Next Story