'இனிமேல்' பாடல் டீசர்...என்னமா இது லோகேஷ்? - நடிகை காயத்ரி சங்கர்


இனிமேல் பாடல் டீசர்...என்னமா இது லோகேஷ்? - நடிகை காயத்ரி சங்கர்
x
தினத்தந்தி 22 March 2024 8:20 AM GMT (Updated: 22 March 2024 9:32 AM GMT)

கடந்த 20ம் தேதி 'இனிமேல்' பாடலின் டீசர் வெளியானது.

சென்னை,

தமிழ் சினிமாவின் ஆக்சன் படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் எடுக்கும் படங்களில் அவருக்கென ஒரு தனி ஸ்டைல் இருக்கும். கடைசியாக 2023 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கமல்ஹாசன் திரையுலக பயணத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் மிகவும் முக்கியமான படம். ரஜினி காந்தின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் 'இனிமேல்' என்ற தலைப்பில் ஒரு சுயாதீன பாடலை அறிவித்தது. சுருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். 'விக்ரம்' படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜுடன் ராஜ்கமல் பிலிம்ஸ் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.

இந்த வெற்றி கூட்டணியில் அமையும் இப்பாடல் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 20ம் தேதி 'இனிமேல்' பாடலின் டீசர் வெளியானது. இதில் லோகேஷ் படு மோசமாக ரொமான்டிக் சீன்களில் ஸ்ருதி ஹாசன் உடன் புகுந்து விளையாடியுள்ளார்.

இந்தசூழலில் நடிகை காயத்ரி சங்கர், ரொமான்டிக் சீன்களில் லோகேஷ் கனகராஜ் நடித்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலைய வெட்டிட்டு.... என்னமா இது லோகேஷ் ? என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.


Next Story