விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
x

நடிகர் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் 'கோப்ரா'. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டே தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோப்ரா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி வெளியாக உள்ளது.
Next Story