விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

‘கோப்ரா’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குனர் அஜய் ஞானமுத்து, அடுத்ததாக விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' திரைப்படதை இயக்கி வருகிறார். இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ். ரவிகுமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, மீனாட்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி உலகெங்கும் வருகின்ற ஆகஸ்ட் 31 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 'கோப்ரா' வெளியாகும் என இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story