இயக்குனர் கோகுலுடன் இணைந்த விஷ்ணு விஷால்..!


இயக்குனர் கோகுலுடன் இணைந்த விஷ்ணு விஷால்..!
x
தினத்தந்தி 8 Jan 2024 12:00 PM GMT (Updated: 8 Jan 2024 12:01 PM GMT)

இந்த படத்தை விஷ்ணு விஷால் தன்னுடைய விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

சென்னை,

'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் தற்போது 'சிங்கப்பூர் சலூன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இதையடுத்து அவர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தை விஷ்ணு விஷால் தன்னுடைய விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ள இப்படம் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால் நடித்துவரும் படங்களின் பணிகள் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.

தற்போது இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் குறித்து விவரங்கள் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


Next Story