'இந்த படத்தை யாராவது தமிழில் ரீமேக் செய்தால் ...' - விஜய் சேதுபதி


இந்த படத்தை யாராவது தமிழில் ரீமேக் செய்தால் ... - விஜய் சேதுபதி
x

விஜய் சேதுபதி, 'மெரி கிறிஸ்துமஸ்' என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார்.

சென்னை,

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, 'மெரி கிறிஸ்துமஸ்' என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இதனை அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கினார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்தார்.

இப்படம் கடந்த ஜனவரி 12-ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில், விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைப்பின் நடிப்பு பாராட்டப்பட்டது. முன்னதாக இப்படத்தின் புரொமோஷன் பணியின்போது, இயக்குனர் ராகவன், விஜய் சேதுபதியிடம் பிடித்த பாலிவுட் படம் குறித்து கேட்டார் அதற்கு விஜய் சேதுபதி,

" ஐ லைக் ஏக் ஹசீனா தி , பட்லப்பூர் மற்றும் அந்தாதுன் பிடிக்கும். இதில், எனக்கு பட்லப்பூர் மிகவும் பிடிக்கும். அதை எழுதிய விதம் மற்றும் காட்சிப்படுத்திய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தை யாராவது தமிழில் ரீமேக் செய்வார்களா? என்று எதிர்பார்த்திருக்கிறேன். அப்படி யாராவது எடுத்தால் அதில் நடிக்க வாய்ப்பு கேட்பேன், "இவ்வாறு கூறினார்.

1 More update

Next Story