தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்கக் கூடாது? நடிகர் கமல்ஹாசன் பேச்சு


தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்கக் கூடாது? நடிகர் கமல்ஹாசன் பேச்சு
x

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கமலஹாசன் பேசியதாவது,

.நான் தமிழன், நான் இந்தியன் என்பது எனது அடையாளம். இங்கு பிரிச்சு விளையாடனும்னு யாராவது நினைச்சா அது இந்தியாவில் நடக்காது. நாம் எப்போதும் வந்தாரை வாழ வைப்போம். தமிழனுக்கு எப்போதும் அமைதி காக்க வேண்டும் என்று தெரியும். எங்கே இருக்க வேண்டும் என்று தெரியும். தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்கக் கூடாது என்பதே என் எண்ணம்.

பொதுவாக எனக்கு இரண்டாம் பாகம் என்றால் ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் என்ன எதிர்பார்த்து வரவேண்டும் என்று மக்களுக்கு தெரியும். இந்தியன் ஒரு பெரிய கதை. படம் மொத்தம் 3 பாகங்கள். இதே போன்று ஒரு படத்தை நான் சிவாஜியை வைத்து இயக்க நினைத்தேன். அவர்தான் என்னை இந்தியன் படத்தில் அப்பா-மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்க சொன்னார்இவ்வாறு அவர் பேசினார்.


Next Story