இந்த வருடத்தில் நிறைய இசையை நிச்சயம் கொடுப்பேன் - யுவன் சங்கர் ராஜா டுவீட்


இந்த வருடத்தில் நிறைய இசையை நிச்சயம் கொடுப்பேன் - யுவன் சங்கர் ராஜா டுவீட்
x

உங்களது இந்த அன்புக்கு மரியாதையுள்ளவனாக இந்த வருடத்தில் நிறைய இசையை நிச்சயம் கொடுப்பேன் என யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் திரைப்பட உலகில் 1992-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னத்தின் 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார். ரகுமான் அறிமுகமான 5 ஆண்டுகளுக்குப் பின்னர், 1997-ம் ஆண்டு 'அரவிந்தன்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது இசை பயணத்தை தொடங்கினார் யுவன். அப்போது அவருக்கு வயது 16.

1999-ம் ஆண்டு இயக்குநர் வசந்தின் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படம் வெளியானது. இந்தப் படம் ஒரு மியூசிக்கல் காதல் பாடம் என்பதால், படத்தில் மொத்தம் 8 பாடல்கள். அதிலும், 'சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே' பாடலும், 'இரவா பகலா வெயிலா மழையா' பாடலும் , தமிழ் ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருந்தது.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. விமர்சன ரீதியாகவும் யுவனுக்கு இந்தப் படத்தின் பாடல்கள் பெரிய அளவில் பெயர் வாங்கி தந்தது.

பின்னர் இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'உனக்காக எல்லாம் உனக்காக' படம் வெளியானது. நகைச்சுவை படமான இந்தப் படத்தில் யுவனின் இசை முக்கியப் பங்கு வகித்தது.

தமிழ் திரையுலகில், தனது அறிமுக படத்தை இயக்க வந்த ஏ.ஆர்.முகருகதாஸ் உடன் இணைந்தார் யுவன். அதுதான் தற்போது ஏகே அழைக்கப்படும் அஜித்தை "தல" என இந்த தமிழகம் தூக்கிக் கொண்டாட தொடங்கிய 'தீனா' திரைப்படம்.

இப்போது கூட இந்தப் படத்தின் பாடல்களை கேட்டுப்பாருங்கள், பாடல்களின் பின்னூட்ட இசையில், யுவனின் இசை அறிவு உங்களை மெய் சிலிர்க்க செய்யும். 'காதல் வெப்சைட் ஒன்று, நீயில்லை என்றால்', 'சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்', 'வத்திக்குச்சிப் பத்திக்காதுடா' பாடல்களும் சரி, 'தினக்கு தினக்கு தின தீனா' என்ற ரீரெக்கார்டிங் இசையிலும் சரி பின்னி பெடலெடுத்திருப்பார் யுவன்.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் 'துள்ளுவதோ இளமை' படத்தில் கமிட்டான யுவனுக்கு, அந்தப் படத்தில் கதையாசிரியரும், கஸ்தூரி ராஜாவின் மகனுமான செல்வராகவனின் நட்பு கிடைத்தது. இருவரும் இணைந்து பணியாற்றிய இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், பாடல்களும் மிகப்பெரிய பலமாக அமைந்ததன.

குறிப்பாக, 'இது காதலா முதல் காதலா' பாடல், 'தீண்ட தீண்ட', 'வயது வா வா அழைக்கிறது', 'நெருப்புக் கூத்தடிக்குது', 'கண்முன்னே எத்தனை நிலவு' உள்ளிட்ட பால்கள் அந்த சமயத்தில் எப்எம்மிலும், டிவியிலும் ஒளிபரப்பாகிக் கொண்டேயிருக்கும். இதன் பின்னர், செல்வராகவன்-யுவன் கூட்டணியில் வெளியான அத்தனைப் படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ரகம். 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' என அதிரடி சரவெடியாய் இந்தக் கூட்டணி வெற்றிகளையும், அக்காலக்கட்டத்தின் இளைஞர்களின் இசை ரசனையையும் அறுவடைச் செய்தது. குறிப்பாக, இந்த 3 திரைப்படங்களின் பின்னணி இசையால், திரையுலகில் கூர்ந்து கவனிக்கப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவர் என்ற நிலையைப் பெற்று தந்தன.

தனது தனித்திறமையாலும், மாறுபட்ட இசையமைப்பாலும், தனக்கே உரிய யுனிக்கான குரலாலும் 26 ஆண்டுகள் திரைத்துறையில் கடந்திருக்கும் யுவனின் பாடல்களும் இசையும் நூறாண்டுகள் பேசப்படும்.

இந்தநிலையில், என்னுடைய 26 வருட திரையிசை பயணத்தை வாழ்த்தி நீங்கல் செய்த அனைத்திற்கும் நன்றி. உங்களுடைய நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி. உங்களது இந்த அன்புக்கு மரியாதையுள்ளவனாக இந்த வருடத்தில் நிறைய இசையை நிச்சயம் கொடுப்பேன் என பதிவிட்டுள்ளார்.


Next Story